ADDED : நவ 09, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் ஒரு உயரிய கலாசாரமும் பண்பாடும் பாரம்பரியமும் மிக்க மண். இந்த மண்ணில் பெண்களுக்கு என, காலம் காலமாக ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. அதை குறைக்கும் விதமாக செயல்படுவது அநாகரிகமானது. இது, நம் சமூக வாழ்வியல் நடைமுறைக்கு ஏற்றதல்ல.
சமூக ஊடகங்கள் குறிப்பாக, முகநுால் மற்றும் 'யு டியூப்'களில், பொது வாழ்வில் இருக்கும் பெண்களை பற்றி அவதுாறாக பேசுவது, செய்தி வெளியிடுவது அநாகரிகமான செயல். கடும் நடவடிக்கை எடுத்து, பொது வாழ்வில் உள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
தேவைப்பட்டால், ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும், சட்டங்களையும் இயற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்ரீகாந்தி
செயல் தலைவர், பா.ம.க.,

