
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காமாட்சி அம்மன் கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடந்தது.
சுற்றுப்புற மீனவ கிராமங்களைச் சேர்ந்த 21 படகுகள் கலந்து கொண்டன. படகுக்கு ஆறு பேர் வீதம் பங்கேற்று படகை செலுத்தினர். 10 கடல் மைல் தொலைவு எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கிராம தலைவர் தமிழ் காளி துவக்கி வைத்தார். போட்டி துவங்கியதும் எல்லையை நோக்கி பாய்மரப் படகுகள் ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை கவர்ந்தன.
வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.40 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் உட்பட ஆறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

