sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சக்தி மாரியம்மன் கல்லூரி பட்டமளிப்பு விழா

/

சக்தி மாரியம்மன் கல்லூரி பட்டமளிப்பு விழா

சக்தி மாரியம்மன் கல்லூரி பட்டமளிப்பு விழா

சக்தி மாரியம்மன் கல்லூரி பட்டமளிப்பு விழா


ADDED : ஜூலை 13, 2011 08:45 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 08:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பூந்தமல்லியை அடுத்த, தண்டலம் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின், 6வது பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவில் கல்லூரி முதல்வர், விஜயபாஸ்கர் ராஜூ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் பிரபாகரராவ் பேசியதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, மக்களின் கல்வி வளர்ச்சி முக்கியம். நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில், 20 சதவீதம் பேர் உயர்க்கல்வி கற்கும் வயதில் உள்ளனர். ஆனால் தற்போது, 12 சதவீதம் பேர் மட்டுமே உயர்க்கல்வி கற்கின்றனர். இதற்கு போதுமான கல்வி நிலையங்கள் இல்லை. உலகிலேயே அதிக பொறியாளர்களை உருவாக்கும் இரண்டாவது நாடு, இந்தியா. இங்கு, 2, 800 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டிற்கு 2.85 லட்சம் பொறியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். உயர்க்கல்வி கற்போரின் எண்ணிக்கையை மேலும், அதிகப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள், இன்னும் கூடுதலாக கல்வி சேவையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் ராஜசேகரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் திலகவதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 250 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.








      Dinamalar
      Follow us