சவுக்கு சங்கர் மீது சேலம் சைபர் கிரைம் போலீஸ் வழக்கு: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
சவுக்கு சங்கர் மீது சேலம் சைபர் கிரைம் போலீஸ் வழக்கு: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
ADDED : மே 07, 2024 04:48 PM
சேலம்: சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதனையடுத்து சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசரை தரக்குறைவாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது சேலம் மாநகர காவல் சோசியல் மீடியாவில் பணியாற்றும் பெண் காவலர் கீதா என்பவர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில் பெண் காவலர்களை சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளார் .இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.