ADDED : மே 31, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர், கொளத்துார் அருகே சேத்துக்குழியை சேர்ந்த 25 வயது பொக்லைன் ஆப்பரேட்டர், இரு நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அனுப்பினர்.
அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளித்தனர்.
நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மருத்துவமனை டீன் தேவிமீனாள் கூறுகையில், “கொரோனா மட்டுமன்றி, சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட இதர இணை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வாலிபர் இறந்துள்ளார்,” என்றார்.