தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சம்பா பயிர் காப்பீடு நாளை இறுதி நாள்

 சம்பா பயிர் காப்பீடு நாளை இறுதி நாள்

 சம்பா பயிர் காப்பீடு நாளை இறுதி நாள்


ADDED : நவ 30, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சம்பா பயிர் காப்பீடு செய்யும் குத்தகை விவசாயிகள், விவசாய அடையாள எண் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் இருந்து, மத்திய அரசு விலக்கு அளித்துஉள்ளது.

இதுகுறித்து, வேளாண்மைத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், தமிழகத்தில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு குறுவை பருவத்தில், இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய, விவசாயி அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு கேட்டு கொண்டதால், குறுவைப் பருவத்தில், பயிர் காப்பீடு செய்ய, விவசாயி அடையாள எண் பதிவேற்றம் செய்வதில் இருந்து, மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

மேலும், தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய, செப்., முதல் நவ., 15ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டு பதிவுகள் நடந்து வந்தன.

தொடர் மழை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய, இன்று வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இருப்பினும், பயிர் காப்பீடு செய்ய, விவசாயி அடையாள எண் கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்ததால், நில உரிமையாளர் தவிர, குத்தகைதாரர்கள், கோவில் நில சாகுபடி செய்வோர் உள்ளிட்ட விவசாயிகளால், பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், நடப்பாண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய, நாளை வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us