sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிச., 7க்குள் அனைத்து தொழிலாளர்களையும் பணியில் சேர்த்துக்கொள்ள சாம்சங் முடிவு

/

டிச., 7க்குள் அனைத்து தொழிலாளர்களையும் பணியில் சேர்த்துக்கொள்ள சாம்சங் முடிவு

டிச., 7க்குள் அனைத்து தொழிலாளர்களையும் பணியில் சேர்த்துக்கொள்ள சாம்சங் முடிவு

டிச., 7க்குள் அனைத்து தொழிலாளர்களையும் பணியில் சேர்த்துக்கொள்ள சாம்சங் முடிவு


ADDED : நவ 07, 2024 11:50 PM

Google News

ADDED : நவ 07, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரையும், டிசம்பர் முதல் வாரத்திற்குள் பணிக்கு அழைக்க உள்ளதாக சாம்சங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், 9 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் அன்பரசன், கணேசன், ராஜா தரப்பில், ஏழு கட்டங்களாக பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு தலைமையில், அக்டோபர், 14, 15ல், தலைமை செயலகத்தில் நடந்த பேச்சில், சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பின், அக்டோபர், 17ல் பணிக்கு திரும்பிய போராட்ட தொழிலாளர்களிடம், 'ஒரு வார பயிற்சிக்கு பின் பணி வழங்கப்படும். உற்பத்தி பாதிக்காத வகையில் படிப்படியாக பணிக்கு அழைக்கப்படுவீர்கள். பணிக்கு வர வேண்டிய தேதி, இ- - மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்' என, சாம்சங் நிர்வாகம் தெரிவித்தனர்.

போராட்டம்


இதையடுத்து, அக்., 21ல் முதற்கட்டமாக, 150 தொழிலாளர்களும், அக்., 28 முதல் 150 தொழிலாளர்கள் என, 300 தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில், நேற்று முத்தரப்பு பேச்சு நடந்தது.

இதில், தொழிற்சங்கம் சார்பில், சி.ஐ.டி.யூ., மாநில தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் சி.ஐ.டி.யூ., தலைவர் முத்துகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல, சாம்சங் நிர்வாகம் சார்பில், பொது மேலாளர் பார்த்திபன், மனிதவள அதிகாரி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, சாம்சங் சி.ஐ.டி.யூ., தலைவர் முத்துகுமார் கூறியதாவது:

அமைச்சர்களுடன் அக்., 15ல் நடந்த பேச்சில் அளித்த ஒப்புதலின்படி, போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்கு வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும்.

இதுவரை, 300 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருவரைக்கூட இதுவரை பணிக்கு அழைக்கவில்லை.

மேலும், தற்போது பணிக்கு திரும்பிய தொழிலாளர்களிடம், தொழிற்சாலையில் உள்ள கமிட்டியில் இணைய கட்டாயப்படுத்துவதையும், மற்ற தொழிலாளர்களின் வீட்டிக்கு சென்று வற்புறுத்துவதையும் கைவிட வேண்டும். தொழிற்சாங்கம் சார்பில் அளிக்கப்பட்ட பொது கோரிக்கைகள் மீதான பதிலுரையை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பயிற்சி


அதற்கு, 'வாரத்திற்கு 150 பேர் என, இரண்டு வாரங்களில் 300 தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம், 11 தேதி முதல் 400 தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

பொதுவான கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க, இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்' என, சாம்சங் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் முதல் வாரத்திற்குள்ளாக, அனைத்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்படுவர் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அடுத்த பேச்சு, வரும் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us