உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 15, 2026 06:46 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'நாங்கள், யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சட்டசபையில் நான் பேசியபோது, 'மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்' என குறிப்பிட்டேன். இதற்காக, சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர்.
இதற்கெல்லாம், நான் பயப்படுற ஆள் இல்லை. ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புகிறேன்.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால், யாரும் கோவிலுக்கு போகக் கூடாது என்று அர்த்தம் இல்லை. கோவிலில் மட்டும் இல்லை; சமூகத்திலும் எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும் என அர்த்தம்.
மேல் ஜாதி, கீழ் ஜாதி என, மக்களை பிரிக்கிறதை தான் ஒழிக்க வேண்டும் என சொன்னேன்.நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
