sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கலப்பட 'எம் - சாண்ட்' விற்பனையை தடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

/

கலப்பட 'எம் - சாண்ட்' விற்பனையை தடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

கலப்பட 'எம் - சாண்ட்' விற்பனையை தடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

கலப்பட 'எம் - சாண்ட்' விற்பனையை தடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்


UPDATED : ஜூன் 15, 2025 02:20 AM

ADDED : ஜூன் 14, 2025 07:23 PM

Google News

UPDATED : ஜூன் 15, 2025 02:20 AM ADDED : ஜூன் 14, 2025 07:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழகத்தில் அதிகரித்துள்ள, கலப்பட எம்-சாண்ட், பி-சாண்ட் விற்பனையை தடுக்க, அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக மணல் மற்றும் எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனத்தின் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அவரது பேட்டி:

தமிழகத்தில் மணல், எம்-சாண்ட் லாரிகளை நம்பி, 50 லட்சம் பேர் உள்ளனர். சில ஆண்டுகளாக, ஆற்று மணல் குவாரிகள் எதுவும் இயங்கவில்லை.

இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்ததால், பல்வேறு ஆறுகளில் மணல் படிவுகள் அதிகரித்துள்ளன. இதை கருத்தில் வைத்து, மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், தமிழகத்தில், 40 இடங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றை திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில ஆண்டுகளாக, ஆற்று மணல் போன்று கிராவல், சவுடு மணல் எடுப்பதற்கும் அனுமதி இல்லை.

இதனால், எம்-சாண்ட், பி-சாண்ட் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 456 நிறுவனங்கள் மட்டுமே, 'எம்-சாண்ட்' தயாரிப்புக்காக பதிவு செய்துள்ளன.

இதன் வாயிலாக கட்டுமான துறையின், 10 சதவீத தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே, எம்-சாண்ட், பி-சாண்ட் பெறுவதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதில், அதிக லாபம் பார்க்கும் நோக்கில், கிரஷர் உரிமையாளர்கள் கலப்பட மற்றும் தரமில்லா எம்-சாண்ட், பி-சாண்ட் விற்பனை செய்கின்றனர்.

முறையாக தயாரிக்கப்பட்ட எம்-சாண்டில், கிரஷர்களில் கழிவாக வெளியேற்றப்படும், கருங்கல் துகள்களை கலந்து விடுகின்றனர். இதில், தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தி, லாரிகளில் ஏற்றி அனுப்பும் போது, கலப்படம் செய்யப்பட்டது வெளியில் தெரியாது.

இதை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்கள், குறுகிய காலத்தில் இடிந்து விழும் நிலை ஏற்படுகிறது.

எனவே, காடுகள், மலைகள் போன்ற இயற்கை வளங்கள், வீடு கட்டுவோரின் நலன் போன்றவற்றை கருத்தில் வைத்து, கலப்பட எம்-சாண்ட், பி-சாண்ட் விற்பவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடைச்சீட்டு பிரச்னையால் ஜல்லி, எம்-சாண்ட் வினியோகம் நிறுத்தம்


லாரிகளுக்கு நடைச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தமிழகம் முழுதும் கருங்கல் ஜல்லி, எம்-சாண்ட் வினியோகம் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:

தமிழகத்தில், 3,000க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு குவாரியில் இருந்தும், குறிப்பிட்ட காலத்தில், எவ்வளவு பொருட்கள் எடுத்து செல்லப்பட வேண்டும் என்பதற்கு கணக்கு உள்ளது. அதற்கு ஏற்றபடி, லாரிகளுக்கான நடைச்சீட்டுகள் வழங்கப்படும். குவாரிகளில் நடைச்சீட்டு வழங்குவதில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததாரர்கள், கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் எழுந்தது. தற்போது, நடைச்சீட்டு ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, குவாரிகளில் நடைச்சீட்டு வழங்கும் பணிகள் தடைபட்டுள்ளன. இதனால், கட்டுமான பணிகளுக்கான கருங்கல் ஜல்லிகள், எம்-சாண்ட் வினியோகம் முடங்கியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us