எம்.ஜி.ஆருக்கு நிகராக சரத்குமாருக்கு மக்கள் சக்தி
எம்.ஜி.ஆருக்கு நிகராக சரத்குமாருக்கு மக்கள் சக்தி
ADDED : ஆக 26, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.,வுக்கு 1,256 எம்.எம்.ஏ.,க்கள், 330 எம்.பி.,க்கள் உள்ளனர். எங்களை எதிரி, எதிரி என சிலர் கூறுகின்றனர்; அரசியலில் எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பும் துாதராக சரத்குமார் இருக்கப் போகிறார். எம்.ஜி.ஆருக்கு நிகராக மக்கள் சக்தி உடையவர் சரத்குமார்.
அவர், சமத்துவ மக்கள் கட்சி துவங்கிய காலகட்டத்தில், தொலை நோக்கு பார்வையுடன் கூடங்குளம் அணுமின் நிலையம், அத்திக்கடவு - அவினாசி உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களுக்காக போராட்டங்கள் நடத்தினார். அவருக்குள் ஏற்பட்ட தேசிய உணர்வால், பா.ஜ.,வில் இணைந்தார். சினிமாவில், வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த அவருக்கு, பா.ஜ.,வில் உயர்ந்த பதவிகள் தேடி வரும்.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

