sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்து முடக்கம்

/

 சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்து முடக்கம்

 சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்து முடக்கம்

 சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்து முடக்கம்

4


ADDED : டிச 14, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 14, 2025 06:18 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்' நிறுவனத் தின், 107 கோடி ரூபாய் சொத்துகளை மீட்ட அமலாக்கத் துறை, அவற்றை வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளது.

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம், 2017ல், இந்தியன் வங்கியில் தவறான நிதிநிலை அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து, இரண்டு கட்டங்களாக, 240 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

எந்த காரணத்திற்காக கடன் பெறப்பட்டதோ, அதற்காக அப்பணம் பயன் படுத்தாமல், வேறு காரணங்களுக்காக முறை கேடாக பயன்படுத்தி, மோசடி செய்தது கண்டறியப் பட்டது.

இதனால், இந்தியன் வங்கிக்கு, 312.13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட தாக, முதலில் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கப் பட்டது. பின் வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது .

இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்த தால், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியன் வங்கி புகாரில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, 235 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி, பிப்., 17ம் தேதி, இந்தியன் வங்கியிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்தது.

மீதமுள்ள, 40 கோடி ரூபாய் சொத்துகளை வங்கி யிடம் ஒப்படைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவையும் கைப்பற்றப்பட்டு நேற்று ஒப்படைக்கப்பட்டன. இது வரை, 275 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல், தவறான நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தும், சரக்கு இருப்புகளை உயர்த்தி காட்டியும் ஆக்சிஸ் வங்கியிடம், 118.88 கோடி ரூபாயை, சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடன் பெற்றது. இதனால், 81.90 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட தாக, மத்திய குற்றப்பிரிவில், அந்த வங்கி புகார் அளித்தது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின், 74.06 கோடி ரூபாய் சொத்துகள், 2023ல் முடக்கப்பட்டன.

தற்போது, 66.93 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சொத்துகளை முடக்கி, ஆக்சிஸ் வங்கியிடம், அமலாக்கத் துறை நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்திடம் இருந்து, 107 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கைப்பற்றி, வங்கிகளிடம் ஒப்படைத்து இருப்பதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us