அதிமுக.,வில் சசிகலா மீண்டும் நுழைய முடியாது: ஜெயக்குமார்
அதிமுக.,வில் சசிகலா மீண்டும் நுழைய முடியாது: ஜெயக்குமார்
ADDED : ஜூன் 17, 2024 05:55 PM

சென்னை: அதிமுக.,வில் இருந்து வெளியேறிய சசிகலா மீண்டும் கட்சிக்குள் நுழைய முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்களை பட்டியில் அடைத்தது போன்று அடைத்து, ஜனநாயக படுகொலையை திமுக செய்தது. தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிட தயார். தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என உறுதியளிக்க முடியுமா? இந்தத் தேர்தலில் திமுகவின் அநியாயம், அக்கிரமம், அராஜகம் அனைத்தும் அரங்கேறும். அதனால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம்.
சசிகலா
சசிகலாவும், அவரது குடும்பமும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்கள். சசிகலாவை மட்டும் ஜெயலலிதா திரும்ப சேர்த்துக் கொண்டார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுக.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத சசிகலாவை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள்? 'எக்சிட்' ஆனவரால் 'என்ட்ரி' கொடுக்க முடியாது. குழப்பவாதி, சந்தர்ப்பவாதி, சுயநலவாதியான ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரசியலில் அவர் ஒரு குறுநாவல்; அதிமுக வரலாற்றுச் சரித்திரம். தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் ஏறவே ஏறாது. பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் இடமே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.