ADDED : மார் 21, 2026 06:55 AM
திண்டிவனம்: தமிழக சட்டசபை தேர்தலில் ராமதாஸ், சசிகலா தரப்பில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தனர்.
திண்டிவனத்தில் நேற்று மாலை பா.ம.க., நிறுவனர் ராமதாசும் அனைத்திந்திய புட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர்சசிகலாவும், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுஎன முடிவெடுத்து அறிவித்தனர். அதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
ராமதாஸ், சசிகலா ஆகிய இரு தரப்பினரும் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து போட்டியிடும். தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சியை மேம்படுத்தும் விதமாக இக்கூட்டணி செயல்படும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராமதாஸ் வீட்டில், சசிகலாவுக்கு இட்லி, பொங்கல் உணவு வழங்கப்பட்டது. வீட்டுக்கு வெளியே காத்திருந்த இரு கட்சி தொண்டர்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.
