ADDED : ஜன 30, 2026 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இறந்தனர்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ.,கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்கிறது. நீதிபதி முத்துக்குமரனிடம் எஸ்.ஐ.,ரகு கணேஷ்,'இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்படி வழக்கு ஆவணங்களை திருத்தி எழுதினேன்,' என்றார். நீதிபதி இன்று ஒத்திவைத்தார்.

