ADDED : நவ 10, 2026 08:56 PM
திருவண்ணாமலை: சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 706 கன அடி நீராக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுாரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, சாத்தனுார் அணை கட்டப்பட்டுள்ளது. இவை, 119 அடி உயரத்துடன், 7,321கொள்ளளவு கொண்டவை. இந்நிலையில், தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இன்று (நவ.,10) அணைக்கு வினாடிக்கு, 706 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனால், அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இன்று நிலவரப்படி, அணையில், தற்போது, 101.90 அடி உயரத்துடன், 4,041 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதனால், அணையை சுற்றி பார்க்க, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. போலீசார் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
