கிராம பொது பாதையில் செல்ல பட்டியலின மாணவர்களுக்கு தடை எஸ்.பி., ஆஜராக உத்தரவு
கிராம பொது பாதையில் செல்ல பட்டியலின மாணவர்களுக்கு தடை எஸ்.பி., ஆஜராக உத்தரவு
ADDED : அக் 09, 2025 07:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தஞ்சை மாவட்டம் கொள்ளாங்கரை கிராமத்தில், 150 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, இப்போது பட்டியலின பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது என சிலர் தடுப்பதாக, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரித்த ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, பொன்தோஸ் ஆகியோர், 'கொள்ளாங்கரை கிராமத்தில், பொதுப் பாதையில் பட்டியலின மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பற் றி, தஞ்சை கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'எஸ் .பி., அல்லது அவரது பதவிக்கு நிகரான அலுவலர், வரும் 27ம் தேதி ஆணை யத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.