தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பள்ளி கட்டடம் சரிந்து 2 பேர் பலி

பள்ளி கட்டடம் சரிந்து 2 பேர் பலி

பள்ளி கட்டடம் சரிந்து 2 பேர் பலி


ADDED : ஜன 19, 2024 12:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒசூர்: தனியார் பள்ளி கட்டடம் கட்டுமான பணியின் போது, அக்கட்டடம் சரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேகல் தாலுகாவில் பேடர்ஹல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்தளம் சிமெண்ட் கான்கிரீட் மோல்டிங் போடப்பட்டு இரண்டாவது தளம் கான்கிரீட் மோல்டிங் போடும் பணி நடைபெற்று வந்தது. இதில், வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டனர். இரண்டாவது தலத்தில் இன்று கம்பி கட்டப்பட்டு கான்கிரீட் மோல்டிங் போட்டுக் கொண்டிருந்தபோது அதிக பாரம் காரணமாக எதிர்பாராத விதமாக கான்கிரீட் மோல்டிங் சரிந்தது விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மின்னர் பிஸ்வாஸ், ஜாகித் ஆகியோர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் சிலர் இடுப்பாட்டில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us