உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 12, 2024 12:00 AM
அ நிறம் | அளவு
சென்னை: பள்ளிக்கல்வித் துறையின் சமூக வலைதள பக்கத்தை முடக்கி, சினிமா, 'வீடியோ'க்களை மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்துஉள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ், சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில் கணக்கு துவங்கப்பட்டு, மாணவர்கள் திறன் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றிய, 'வீடியோ'க்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி, அதில், சினிமா வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.
