இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி தேர்வு கால அட்டவணை அமைச்சர் மகேஷ் பேட்டி
இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி தேர்வு கால அட்டவணை அமைச்சர் மகேஷ் பேட்டி
ADDED : ஜூலை 24, 2025 12:14 AM
திருச்சி,:''பள்ளித் தேர்வுகளுக்கான கால அட்டவணை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை துவக்கி வைத்த பின், அமைச்சர் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'ஓரணியில் தமிழகம்' திட்டம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். எது எப்படி இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை மதித்து நாங்கள் செயல்படுவோம்.
பள்ளித் தேர்வுகளுக்கான கால அட்டவணை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
கொரோனா காலகட்டத்தில் துவங்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம், பணம் கொடுத்து டியூஷனுக்கு செல்ல முடியாத குழந்தைகளுக்காக செயல்படத் துவங்கி விட்டது.
சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக, எங்களுடைய அழைப்பை ஏற்று, 6 லட்சத்துக்கும் அதிகமான படித்தவர்கள் முன் வந்துள்ளனர்.
ஏழை பெற்றோரின் குழந்தைகளை தத்தெடுக்கும் விதமாகத் தான், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.