சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி: பள்ளிகள் கோரிக்கை
சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி: பள்ளிகள் கோரிக்கை
UPDATED : நவ 15, 2026 12:04 AM
ADDED : நவ 15, 2026 12:04 AM
சென்னை: தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார், த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
யாரோ தந்த தவறான தகவல்களை அடிப்படையாக வைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, அமைச்சர் கூறுவதை, பெற்றோர் விரும்பவில்லை.
பொதுத் தேர்வுக்கு, இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இப்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தினால் தான், அவர்கள் வெற்றி பெறுவர்.
எனவே, மாணவ – மாணவியரின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட, சிறப்பு வகுப்புகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
