கனமழையால் 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: உங்கள் மாவட்டம் இதில் இருக்கா?
கனமழையால் 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: உங்கள் மாவட்டம் இதில் இருக்கா?
UPDATED : நவ 27, 2024 06:35 AM
ADDED : நவ 27, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், 15 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
* கடலூர்
* விழுப்புரம்
* தஞ்சாவூர்
* திருவள்ளூர்
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* நாகபட்டிணம்
* திருச்சி
* ராமநாதபுரம்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* அரியலூர்
புதுச்சேரியிலும் விடுமுறை:
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.