PUBLISHED ON : பிப் 03, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
செவ்வாயில் 'குப்பை'
சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து உள்ள கோள் செவ்வாய். அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வுகள் நடக்கின்றன. செவ்வாயில் இதுவரை மனிதர்கள் கால் வைக்க வில்லை. இருப்பினும் 7200 கிலோ எடை குப்பையை சேர்த்துள்ளதாக அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலை தெரிவித்துள்ளது. 53 ஆண்டுகளில் பல்வேறு விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது. இவை ஆயுட்காலம் முடிந்ததும், குப்பையாக சேர்கின்றன. இதுதவிர ரோவர், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்குவதற்கான உபகரணங்கள், வெப்ப கவசம், பாராசூட் போன்றவையும் குப்பையாக சேர்ந்துள்ளன.
தகவல் சுரங்கம்
இளம் வயதில் 'பாரத ரத்னா'
இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா. 1954ல் உருவாக்கப்பட்டது. முதல் ஆண்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜி, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், விஞ்ஞானி சி.வி.ராமனுக்கு வழங்கப்பட்டது. கடைசியாக பீஹார் முன்னாள் முதல்வர் மறைந்த கர்பூரி தாகூருக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 49 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. இதில் 15 பேருக்கு மறைவுக்குப்பின் அளிக்கப்பட்டது. குறைந்த வயதில் (40) பெற்றவர் கிரிக்கெட் வீரர் சச்சின். அதிக வயதில் (100) பெற்றவர் சமூக சேவகர் கேசவ் கார்வே. விருது பெற்ற முதல் பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. முதல் நடிகர் எம்.ஜி.ஆர்.,