ADDED : ஜன 23, 2025 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:மணப்பாறையில், வரும் 28ல், 20,000 சாரணர் - சாரணியர் பங்கேற்கும், 75வது ஆண்டு விழா நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில், ஜன., 28ல், இந்தியா முழுதும் இருந்து சாரணர் - சாரணியர் பங்கேற்கும், 'ஸ்கவுட் ஜம்பூரி' எனும் பெருந்திரள் கூடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைத்து மாநிலங்களில் இருந்தும், 20,000த்துக்கும் மேற்பட்ட சாரணர் - சாரணியர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
ஏழு நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாரணர் - சாரணியர் தங்கும் வகையில், 356 ஏக்கரில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேரணி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.