ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசியது சரிதான் : ஜான் பாண்டியன்
ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசியது சரிதான் : ஜான் பாண்டியன்
ADDED : ஜன 21, 2025 06:27 AM
திருநெல்வேலி:   தமிழகத்தின் சீர்திருத்தவாதி என ஈ.வெ.ரா.,வை சொல்லக்கூடாது என  தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் இலவச வாக்குறுதிகள் குறையும், ஊழல் ஒழியும்.
தி.மு.க.,வின் செயல்பாடு சரியில்லாத நிலையில் தான் விஜயை கண்டு அஞ்சுகிறார்கள். அரசியலில் போட்டியிட்டு வரட்டும் விஜய் குறித்து பேசலாம்.
பட்டியல் சமூக வெளியேற்றம் குறித்து நடவடிக்கைக்கு பார்லிமென்டிலிருந்து சட்டசபைக்கு அனுப்பபட்டு பல நாட்களாகியும் ஆளும் அரசு கிடப்பில் போட்டுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மாநில அரசுக்கு பலவீனமாக அமையும். அதனால் அதனை செய்ய அரசு மறுக்கிறது. எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அரசு செவி சாய்க்கப்போவதில்லை.
தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் அதே நிலை தான்.
ஓட்டுக்காக ஈ.வெ.ரா., வை பெரிய ஆளாக காட்டுகிறார்கள். அவர் எந்த சாதனையும் செய்யவில்லை.
ஈ.வெ.ரா., தீண்டாமையை ஒழித்தார் என்கிறார்கள். இப்போதும் ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தீண்டாமை உள்ளது. தீண்டாமையை ஈ.வெ.ரா., தான் ஒழித்தார் என்பதை ஏற்க முடியாது.
தமிழகத்தின் சீர்திருத்தவாதி என ஈ.வெ.ராவை  சொல்லக்கூடாது. காலம் மாறியதும்  எழுச்சி உருவாவதும் தானாக வந்தது.
ஈ.வெ.ரா., வாரிசு என சொல்லுபவர்கள் தீண்டாமை பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தீண்டாமையை ஒழிக்க சொல்லுங்கள்.
ஈ.வெ.ரா பற்றி சீமான் பேசியது சரிதான். அதில் தவறில்லை.
இவ்வாறு  ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

