'வீடியோ' அழைப்பு வாயிலாக முதன்முறையாக 'சீட்' ஒதுக்கீடு
'வீடியோ' அழைப்பு வாயிலாக முதன்முறையாக 'சீட்' ஒதுக்கீடு
ADDED : ஆக 13, 2026 11:06 PM
சென்னை: மரு த்துவ மாணவர் சேர்க்கை வரலாற்றில், முதல் முறையாக, 'வீடியோ' அழைப்பு வாயிலாக, ஒரு மாணவருக்கு மருத்துவ இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. இதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசு களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள, 11 இடங்களுக்கு, நேற்று சேர்க்கை நடந்தது.
இதில், தரவரிசை பட்டியலில், ஒன்பதாவது இடம் பிடித்த மாணவர் மோனிஷ் பெயரை, கலந்தாய்வு குழுவினர் உச்சரித்த போது, அவர் அங்கு இல்லை. மொபைல் போன் வாயிலாக, அவரை தொடர்பு கொண்டபோது, கலந்தாய்வு நடப்பது தெரியாது என, தெரிவித்துள்ளார்.
அந்த மாணவரின் நலன் கருதி, முதல் முறையாக, 'வீடியோ' அழைப்பு வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, அந்த மாணவருக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இடம் ஒதுக்கப்பட்டது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் லோகநாயகி கூறியதாவது:
மாணவரின் நலன் கருதி, அவருக்கு வாய்ப்பு தரும் வகையில், 'வீடியோ' அழைப்பு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லுாரிக்கு செல்லும்போது, அங்கு அவரது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, சேர்க்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
