ADDED : மார் 12, 2026 01:05 AM
ஏ .ஐ.எப்., எனப்படும் மாற்று முதலீட்டு நிதிகள், புதிய திட்டங்களை விரைவாக துவங்க 'லாட்ஜ் அண்டு லாஞ்ச்' எனும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
'மெர்ச்சன்ட் பேங்கர்'களின் சான்றிதழை அடிப்படையாக கொண்டு, புதிய முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க இந்த முறை உதவும். இந்தியாவின் ஏ.ஐ.எப்., முதலீடுகள் 16 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளன. இது, கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுவரை 20,500 கோடி ரூபாய் மட்டுமே ஸ்டார்ட் - அப்களுக்கு சென்றுள்ளது. எனவே, ஏ.ஐ.எப்., நிறுவனங்கள் அதிக ரிஸ்க் எடுத்து, ஸ்டார்ட் - அப் மற்றும் புதுமையான துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும். சொத்து மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
