உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 25, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 30வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையில் அரசுத் துறை அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று, 30வது நாளாக பிராட்வே, எஸ்பிளனேடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, ௫00 இடைநிலை ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்; 10 பஸ்களில் ஏற்றி, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.
