ADDED : அக் 05, 2025 01:37 AM
தமிழக கிராமங்களில் மிக வேகமாக, ரகசியமாக மதமாற்றம் நடந்து வருகிறது; இது ஆபத்தானது. மருத்துவமனைகளுக்கு நோயாளிகளைத் தேடிச் செல்லும் சிலர், அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பொருளுதவி அளிப்பது போல் முயற்சித்து, நோயாளிகளை மதம் மாற்ற முயல்கின்றனர். இது தொடர்பாக, தமிழகம் முழுதும் பல இடங்களிலும் பிரச்னைகள் எழுந்து, போலீஸ் வரை புகார்கள் சென்றுள்ளன. ஆனாலும், ஏதாவது ஒரு வழியில், அப்பாவி ஏழைகளை நோக்கி குறிவைத்து மத மாற்ற கும்பல் அலைந்து வருகிறது.
கிராம கோவில்களில், இன்னமும் அனைத்து மக்களுக்கும் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, மதம் மாற்றுகின்றனர்.
எனவே, கிராம கோவில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதுடன், கோவில் நிர்வாகத்தில் அனைத்து தரப்புக்கும் இடமளிக்க வேண்டும். மத மாற்ற முயற்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம்