ADDED : மார் 10, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒடுகத்துார்:வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்டேசன், 58; பாக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர்.
இவரது உறவினர் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன், 36, அதே பகுதி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றுகிறார். இவர், முறைகேடு விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வேலையை மீண்டும் பெறுவதற்கு, வெங்கடேசனை அடிக்கடி ஜானகிராமன் சந்தித்தார்.
நேற்று முன்தினம் வெங்கடேசனை சந்தித்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பீர் பாட்டிலால் வெங்கடேசன் மண்டையை உடைத்தார். வேப்பங்குப்பம் போலீசார் ஜானகிராமனை கைது செய்தனர்.

