ADDED : மே 28, 2026 01:49 AM
தி.மு.க., கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், அணி மாறிச்சென்று முதல்வர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசின் அமைச்சரவையில், இடம் பெற்றுள்ளன.
இதனால், அந்த கட்சிகளை, ஆபாசமாக விமர்சித்து, தி.மு.க., துணை பொதுச்செயலரும், எம்.பி.,யுமான ராஜா தெரிவித்த கருத்துக்கு, பல்வேறு தரப்பினரும், கண்டனம் தெரிவித்து உள்ளனர். ராஜாவை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலுாரை அடுத்த குன்னம் பகுதியில், தி.மு.க, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இரு கட்சிகளையும் சேர்ந்த 120 பேர் மீது குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள, ராஜா வீட்டிற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
