sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விடுதிகளில் பாதுகாப்பு: அண்ணாமலை வலியுறுத்தல்

/

விடுதிகளில் பாதுகாப்பு: அண்ணாமலை வலியுறுத்தல்

விடுதிகளில் பாதுகாப்பு: அண்ணாமலை வலியுறுத்தல்

விடுதிகளில் பாதுகாப்பு: அண்ணாமலை வலியுறுத்தல்


ADDED : ஜூன் 10, 2025 04:00 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:

சென்னையில் அரசு சேவை இல்லத்தில் தங்கி படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுதும், பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்குகள், தி.மு.க., அரசால் பொறுப்பின்றி கையாளப்படுவதன் விளைவு, சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும், சிறிதும் பயம் இல்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு குற்றம் நடந்த பின்பும், குற்றவாளியை பிடித்து விட்டோம் என பெருமை பேசி கொண்டிருக்கும் அரசு, குற்றம் நடக்காமல் தடுப்பது தான் அரசின் முதல் கடமை என்பதை மறந்து போய்விட்டது.

உடனே, தமிழகம் முழுதும் உள்ள மாணவியர் விடுதிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us