டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
ADDED : ஏப் 24, 2025 11:48 AM

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டில்லி போலீசார் அகற்றினர்.
இதுவரை மத்திய அரசு அடுத்தடுத்து எடுத்த அதிரடி நடவடிக்கைகள் விபரம் பின்வருமாறு:
* இந்தியா- பாக்., இடையே, 1960ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
* பாக்., உடனான வாகா- அட்டாரி எல்லை மூடப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும், இந்தியாவில் பயணம் செய்ய அனுமதி கிடையாது.
* வாகா- அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்திருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி, மே 1ம் தேதிக்குள் திரும்ப வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.
* இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்
* டில்லியில் உள்ள பாக்., துாதரகம் செயலற்றதாக அறிவிக்கப்பட்டது. தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.