தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சீமை கருவேல மரம் ‘ஆன்லைனில்’ ஏலம்

சீமை கருவேல மரம் ‘ஆன்லைனில்’ ஏலம்

சீமை கருவேல மரம் ‘ஆன்லைனில்’ ஏலம்


UPDATED : நவ 03, 2026 02:05 AM

ADDED : நவ 03, 2026 02:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 02:05 AM ADDED : நவ 03, 2026 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘தமிழகத்தில், 24 வனக்கோட்டங்களில், சீமை கருவேல மரங்கள், ‘ஆன்லைன்’ வழியே ஏலம் விடப்படும்’ என, வனத்துறை அறிவித்துள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் மரங்கள் வெட்டி விற்பனை செய்வது, தொடர் நடவடிக்கையாக உள்ளது. இதில், சந்தனம், செம்மரம் போன்றவை வெட்டப்பட்டு, கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகின்றன. இந்த மரங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில், மத்திய அரசின் இணையதளம் வாயிலாக, ‘ஆன்லைன்’ ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சீமை கருவேல மரங்களை வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் கிடைக்கும் மரங்களை, உள்ளூர் அளவில் வனக்கோட்ட நிலையில், ஏலம் விடுவது வழக்கம்.

தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, சீமைகருவேல மரங்கள், ‘ஆன்லைன்’ முறையில் ஏலம் விடப்பட உள்ளன. செங்கல்பட்டு முதல் துாத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட, 24 வனக்கோட்டங்களில் சீமை கருவேல மரங்கள், ஏலத்துக்கு தயாராக உள்ளன. இது தொடர்பான, அறிவிப்பை, வனத்துறை வெளியிட்டுள்ளது.

நவ., 23 முதல் டிச.,9 வரை, அலுவலக வேலை நாட்களில், மத்திய அரசின் எம்.எஸ்.டி.சி., போர்டல் வாயிலாக, ‘ஆன்லைன்’ ஏலத்தில், சீமை கருவேல மரங்கள் விற்பனை நடக்கும் என, வனத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us