'ஸென்ஸார்' அனுமதித்த 'கிங்டம்' திரைப்படத்தை தடுக்காதீங்க: சீமான் கட்சியினருக்கு அறிவுரை
'ஸென்ஸார்' அனுமதித்த 'கிங்டம்' திரைப்படத்தை தடுக்காதீங்க: சீமான் கட்சியினருக்கு அறிவுரை
ADDED : ஆக 07, 2025 12:16 AM

சென்னை: 'விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள, கிங்டம் திரைப்படம், ஜூலை 31ல் வெளியானது. இப்படத்தில், தமிழ் ஈழ பிரச்னை குறித்த அவதுாறு காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, வெளியீட்டு உரிமை பெற்றுள்ள, நிறுவனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி கூறியதாவது:
'ஸென்ஸார் போர்டு' அனுமதித்த திரைப்படத்தை, வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது. படம் திரையிடுவதைத் தடுக்கக் கூடாது. மாறாக படத்துக்கு வழங்கிய சான்றிதழை ரத்து செய்யக்கோரி, சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என, பிரசாரம் செய்யலாம்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, காவல் துறை மற்றும் நாம் தமிழர் கட்சி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.