ADDED : ஏப் 18, 2025 03:07 AM
விக்கிரவாண்டி:முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசிய வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணை, விக்கிரவாண்டி கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் கடந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசினார்.
இது குறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் கஞ்சனுார் போலீசில் புகார் செய்ததின் பேரில், வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார். சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர் பேச்சிமுத்து ஆஜராகி , சீமான் வழக்கில் ஆஜராகாததற்கு மனு அளித்தார். மனுவை ஏறறுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் மே 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டார்.

