தற்காலிக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; சீமான் வலியுறுத்தல்
தற்காலிக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; சீமான் வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2025 06:39 PM
சென்னை:''அரசு மற்றும் கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும், தற்காலிக ஊழியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக, 7,300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், ஊதிய உயர்வு, பணி நிலைப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள் என பெயரளவில் கூறப்பட்டாலும், எந்த இடத்திலும் அவர்கள் கவுரவமாக நடத்தப்படவில்லை. மிகவும் இழிவான நிலையிலேயே நடத்தப்படுகின்றனர். மேலும், 11 மாதங்கள் மட்டுமே சொற்ப அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது.
துறைத் தலைவர்கள் இல்லாத கல்லுாரிகளில், துாணாக நின்று, லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றனர். எனவே, பல்கலை மானியக்குழு பரிந்துரைப்படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம், 57,500 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.