தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என அடித்து விடுகிறார் சீமான்
தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என அடித்து விடுகிறார் சீமான்
ADDED : அக் 24, 2024 07:53 PM
தி.மு.க., கூட்டணியை பற்றி காங்., தரப்பில் இருந்து யாரும் எதுவும் பேசுவதில்லை. தமிழகத்தில் இண்டியா கூட்டணி மிக மிக வலிமையாகவும், இணக்கத்தோடும், உறுதியாகவும் இருக்கிறது. இதில் விரிசல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இண்டியா கூட்டணி குறித்து பேசுவதற்கு, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு தகுதி இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், யார் திராவிடம் என்ற சொல்லை விட்டு பாடினோர்களோ, அவர்களைத்தான் விமர்சிக்க வேண்டும். அவர்களை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டுமா வேண்டாமா என்பது போல பிரச்னையை திசை திருப்பி விட்டுள்ளனர். சீமான், சரி தப்பெல்லாம் பற்றி கவலைப்படாமல் மனதில் பட்டதை அடித்து விடுவார். அப்படியொரு அடித்துவிடும் அறிவிப்புத்தான், நான் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்பது.
செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,

