பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சீமான் கடும் கண்டனம்
பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சீமான் கடும் கண்டனம்
ADDED : அக் 10, 2025 03:21 AM
சென்னை:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
கோவையில், 1791 கோடி ரூபாயில், 10 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள, கோவை -- அவிநாசி உயர்மட்ட மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்த, தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரனார், காலிங்கராயன், பொன்னர் - சங்கர், ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடிய பல்லடம் பொன்னுசாமி ஆகியோரின் பெயர்களை வைக்காமல், ஜி.டி.நாயுடு பெயரை, வைத்ததன் காரணம் என்ன?
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கியவர்கள், 'ஜி.டி.,' என ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான், தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழை வளர்க்கும் முறையா.
சென்னை, நந்தனத்தில், முத்துராமலிங்க தேவர் சாலை என, பெயர் வைத்துவிட்டு, பின்னர் முத்துராமலிங்கனார் சாலை என்று, மாற்றிய அரசு, கோவை பாலத்துக்கு ஜாதியோடு பெயரை சூட்டுவது ஏன்.
ஒரு பக்கம், ஜாதி பெயர்கள் நீக்கம், மறு பு றம் ஜாதியோடு பெயரிடும், இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா. தமிழர் மண்ணில், தமிழர்களுக்கு, எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற, தீய எண்ணத்தை தவிர, வேறு என்ன நோக்கம் இதில் இருக்க முடியும்.
இது தமிழ் பேரினத்திற்கு, இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.