ADDED : அக் 29, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'ஆம்னி பஸ்களில் சோதனை செய்யும் போது, வரி நிலுவை உள்ள பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
நாளை மறுதினம் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், 'ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது' என, அதன் உரிமையாளர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் மற்றும் விதிமீறல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில், 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள், பஸ் நிலையங்களிலும், வழித்தடத்திலும் சோதனைகளில் ஈடுபடுகின்றன. சோதனையின் போது, வாகனங்களுக்கு வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

