ADDED : செப் 18, 2024 10:18 PM
சென்னை:தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக, லோக்சபா எம்.பி., நவாஸ்கனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், பார்லிமென்ட் முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில், ஒரு இடத்திற்கு ஓட்டுப்பதிவு அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி, வக்பு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே வக்பு வாரியத் தலைவராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி உறுப்பினர் ஆகி உள்ளதால், அவருக்கே வாரியத்தின் தலைவர் பதவி அளிக்கப்படக்கூடும் என, வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அபுபக்கரை, வாரிய உறுப்பினராக்கி, தலைவராக்க வேண்டும் என சிலர் விரும்புகின்றனர்.

