சுய உதவிக்குழு மேம்பாடு 'மின்மதி 2.0' செயலி அறிமுகம்
சுய உதவிக்குழு மேம்பாடு 'மின்மதி 2.0' செயலி அறிமுகம்
ADDED : ஜன 10, 2025 11:34 PM
சென்னை:தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்காக உருவாக்கப்பட்ட, 'மின்மதி 2.0' மொபைல் செயலி மற்றும் புதுப்பொலிவுடன் கூடிய முற்றம் இதழை, துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
மகளிர் சுய உதவி குழுக்களின் நிர்வாகத்திறன் மற்றும் நிதி மேலாண்மை திறனை மேம்படுத்தும் வகையில், இணையதளம் வாயிலாக, கற்றல் அடிப்படையில், 'மின்மதி 2.0' மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம் மற்றும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட தலைப்புகளில், ஆடியோ மற்றும் வீடியோ வழியாக பயிற்சி வழங்கப்படும். இதன் வழியே பயிற்சி பெற்று தேர்வாகும், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, மின் சான்றிதழ் வழங்கப்படும்.
அதேபோல, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை, மகளிர் சுய உதவிக் குழுவினர் அறிந்து கொள்வதற்காக துவக்கப்பட்ட முற்றம் மாத இதழ், புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.