ADDED : பிப் 22, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அழகிரி மாற்றப்பட்டு, புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவர் பதவி ஏற்கும் விழா நேற்று நடந்தது.
காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ, மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்புடன், செல்வப்பெருந்தகை திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தைப் போலவே, சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் முன்னிலையில், 'தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்காக அயராது உழைப்பேன்' என உறுதிமொழி கூறி, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றார்.