மாணவியரிடம் ஆபாச படம் காட்டி சில்மிஷம்; சேமியா வியாபாரி கைது
மாணவியரிடம் ஆபாச படம் காட்டி சில்மிஷம்; சேமியா வியாபாரி கைது
ADDED : நவ 24, 2024 08:42 AM
வாணியம்பாடி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அரப்பாண்ட குப்பத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பக்கத்து கிராமமான, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள, தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, படித்து வீடு திரும்புகின்றனர்.
அவ்வாறு பள்ளி முடிந்து வீடு செல்லும் போது, மாணவியரிடம் வாலிபர் ஒருவர் ஆபாச வீடியோ காண்பித்தும், சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார்.
இது குறித்து மாணவியர், பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பெற்றோர் மறைந்திருந்து கவனித்தபோது, வாலிபர் ஒருவர் மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதில் ஆத்திரமடைந்த பெற்றோர், அந்த வாலிபரை நன்கு 'கவனித்து' வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரித்ததில், ஜாப்ரா பாத்தை சேர்ந்த சேமியா வியாபாரி இம்ரான், 25, என்பது தெரிந்தது.
இதையடுத்து அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.