உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 27, 2024 07:10 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நாளை 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய புகார் எழுந்தது, இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் விசாரணையை நாளை 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ் உத்தரவிட்டார்.
