ADDED : நவ 09, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஓட்டு திருட்டை தடுக்க வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில், ஒரு கோடியே 10 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அந்த படிவங்கள், 185 பண்டல்களாக கட்டப்பட்டு, லாரியில் டில்லி அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

