ADDED : நவ 09, 2025 01:05 AM

சென்னை: நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 59வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். வாழ்த்து தெரிவிக்க வந்த கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர் களுக்கும், மதுரை ஸ்பெஷல் அசைவ உணவு விருந்து வழங்கினார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில், அவரது 59வது பிறந்த நாளை நேற்று கட்சி யினர் கொண்டாடினர்.
அவருக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், பா.ம.க., தலைவர் அன்புமணி உட்பட , பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, நேரில் வந்த கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், மதுரை ஸ்பெஷல் அசைவ விருந்து, சீமான் வீட்டில் பரிமாறப்பட்டது.
மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, மட்டன் எலும்பு குழம்பு, நல்லி மட்டன் சுக்கா, வஞ்சிரம் மீன் வறுவல், இறால் தொக்கு, முட்டை மசாலா, மீன் குழம்பு, குடல் கறி, ஈரல், ரத்த பொரியல் போன்ற உணவு வகைகள், விருந்தில் இடம் பெற்றிருந்தன.

