ADDED : டிச 10, 2025 06:09 AM

சென்னை: த.வெ.க.,வில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வன், அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த செங்கோட்டையனின் அண்ணன் மகனும், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான செல்வன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
பின்னர் பேசிய செல்வன், “செங்கோட்டையனின் அரசியல் வளர்ச்சிக்கு என் தந்தை காளியப்பன் தான் காரணம். தன் வளர்ச்சிக்கு காரணமான அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளார்.
''சட்டசபை தேர்தலில், கோபி தொகுதியில் பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளரே வெற்றி பெறுவார்,” என்றார்.
இதற்கிடையில், செங்கோட்டையனை எதிர்த்து கோபியில் செல்வனை வேட்பாளராக களமிறக்கும் நோக்கத் துடன், அ.தி.மு.க.,வில் அவரை பழனிசாமி, சேர்த்திருப்பதாக கூறுகின்றனர்.

