ஓட்டு போடாத செந்தில் பாலாஜி :கோவையிலேயே ஐக்கியம்
ஓட்டு போடாத செந்தில் பாலாஜி :கோவையிலேயே ஐக்கியம்
ADDED : ஏப் 23, 2026 11:03 PM
கோவை:சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளருமான செந்தில் பாலாஜி ஓட்டளிக்கவில்லை.
கோவையில் தி.மு.க.விற்கு வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், இதுவரை கரூரில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
கோவை, கரூர் 2 மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜி மாறி மாறி பிரசாரம் செய்தார். செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு கரூர் தொகுதியில் தான் ஓட்டு உள்ளது. தேர்தல் நாளில், அவர் காலை கரூர் சென்று வாக்களித்துவிட்டு, கோவை வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி கரூர் செல்லாமல் கோவையிலேயே இருந்துவிட்டார். சட்டசபை தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.
இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ''செந்தில் பாலாஜி ஓட்டு போடுவதற்காக கரூர் செல்லவில்லை. கோவையிலேயே தான் இருந்தார். ஓட்டுப்பதிவின்போது கோவை தெற்கு தொகுதியில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டால், தாம் முன்னின்று சமாளிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். தேர்தலுக்கு முன்பாகவே கோவை தெற்கு தொகுதியில் குடியேறினார். தேர்தலுன்று கூட அவர் கோவையில் தான் இருந்தார்; கரூர் செல்லவில்லை,'' என்றனர்.
