உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 05, 2026 10:57 PM
அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் நிதி அமைச்சர் பட்ஜெட் வாசித்துக் கொண்டிருந்தபோது, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாதியில் எழுந்து சென்றார்.
நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடும்போது, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார். 30 நிமிடங்கள் கழித்து, மீண்டும் தனது இருக்கைக்கு திரும்பினார். த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க குதிரை பேரம் நடத்திய புகாரில், செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் இரண்டு வேளை ஆஜராகி, அவர் கையெழுத்திட வேண்டும் என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக அவர் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
