வீடியோ உலகம் வெகுவாக விரிவடைந்து வருகிறது. சாதாரணமாக ஒரு விஷயத்தை ஆடியோவாக சொல்வதற்கும், வீடியோவாக சொல்வதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. வீடியோவாக சொல்லும் போது மக்களிடம் பல மடங்கு 'ரீச்' ஆகிறது. வீடியோ எடுப்பதற்கு அதிக செலவாகும். எடிட்டிங் செய்து கொண்டு வருவதற்கு பல நாள் ஆகும் என்ற நிலைமை இருக்கிறது.
இதற்காக, ரித்விகா சவுத்ரி, அகில் மேனன் மற்றும் அபூர்வ் ஜெயின் ஆகியோரால் 2021ல் துவக்கப்பட்ட Unscript நிறுவனம், எடிட்டிங் செயல்முறைகளின் தேவையை நீக்கி, வீடியோ தயாரிப்பை எளிமைப்படுத்தி உள்ளது.
பெங்களூரு மற்றும் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட AI ஸ்டார்ட்அப் Unscript சமீபத்தில் இத்துறையில் சாதனைகள் படைத்து வருகிறது.
ஒரு புகைப்படத்தை முழு அளவிலான வீடியோவாக மாற்றுகிறது, தலை அசைவுகள், கண் அசைவுகள், முகபாவனைகள், குரல் மாடுலேஷன்கள் மற்றும் உடல் மொழி ஆகியவற்றை உருவாக்கி, 2 நிமிடங்களுக்குள் தருகிறது. கைகளினால் செய்யப்படும் எடிட்டிங் முயற்சிகளை கணிசமாக குறைத்து தரமான வீடியோவை கொடுக்கிறது.
இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி புதிய அப்கிரேட் Google Vlogger, Microsoft-ன் VASA-1 மற்றும் Alibaba-ன் EMO ஆகிய சாப்ட்வேர்களுக்கு போட்டியாக உள்ளது,
இது பிராண்ட்கள், மார்க்கெட்டிங் ஏஜென்ஸி மற்றும் இன்புளூயன்சர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே இதன் செலவு குறைந்த, மேம்படுத்தக்கூடிய வீடியோ தயாரிப்பு திறன்களால் பயனடைகின்றன.
தற்போது, Unscript ஆனது, ஹெல்த்பைமீ, அமேசின் கிரேஸ், ப்ளோவொர்க்ஸ், ரேடியோசிட்டி, HUL மற்றும் பாம்பே ஷேவிங் கம்பெனி போன்ற முன்னணி பிராண்ட்களுடன் கூட்டு சேர்ந்து பல்வேறு தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் AI தீர்வுகளை வழங்குகிறது. இவர்களின் பர்சனலைஸ்டு வீடியோக்கள் HealthifyMe க்கான இணையதள வருகையில் 2.8X அதிகரிப்புக்கு வழிவகுத்தது, Floworks க்கான வருகையில் 4X கூடியிருக்கிறது. வாடிக்கையாளர்களின் சிஸ்டத்துடன் எளிதாக ஒருங்கிணைக்கும் ஈர்க்கக்கூடிய வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்குவதில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.
'டப்' செய்வது எளிது
இந்நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் வீடியோக்களை சிரமமின்றி பல மொழிகளில் டப் செய்து மொழிபெயர்க்கலாம். டெக்ஸ்ட் ஸ்கிரிப்ட்களில் இருந்து உருவாக்கப்படும் லைப் லைக் AI அவதார்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் பிரசாரங்களையும் உருவாக்க உதவுகிறது. 'அன்ஸ்கிரிப்ட்' தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களுக்கு வலுவூட்டும் வீடியோக்களை விரைவாகவும், மலிவாகவும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இணையதளம் www.unscript.ai
விவரங்களுக்கு இ மெயில்: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204 - 51259
இணையதளம் www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -